(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
ஜனநாயகக் கட்சியின் தலைவரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா எதிர்வரும் 12ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து தேர்தல் தொகுதிகள் தோறும் தனது கட்சி அலுவலகங்களைத் திறந்து வைக்கவுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயருமான சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.
கல்குடாத் தேர்தல் தொகுதியிலுள்ள ஓட்டமாவடி, மற்றும் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
இதேவேளை சரத் பொன்சேகாவின் ஜனநாயகத்துக்கான உறுதியான போராட்டங்களுக்காக ஜுன் 12ஆம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடக்கும் நிகழ்வில் அவருக்கு விருதும் கௌரவமும் அளிக்கப்படவிருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.