(சிவம்)புனர்வாழ்வு அதிகார சபை அரச வங்கிகளின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படும் கடனுக்கு அறவிடப்படும் வட்டியைக் குறைக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
ஆட்களையும், ஆதாரங்களையும், கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகார சபையினால் ( ரேப்பியா) -மட்டக்களப்பு மாவட்டத்தில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் பணத்திற்கான கோவைகளின் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யும் நடமாடும் சேவை இன்று வெள்ளிக்கிழமை (12) மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்
எமக்கு பாதிக்கபட்டவர்களால் வழங்கப்பட்ட கோவைகளையே நாம் புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பினோம் அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் இழப்பீடுகளை வழங்குவதற்காக உங்களது காலடிக்கு வந்துள்ளார்கள்.
யுத்த வடுக்களைக் கொண்டிருக்கும் மக்களுக்கு 15 வருடங்களின் பின்பு தனிநபர்களுக்கு ருபாய் 100, 000 , அரச உத்தியோகத்தர்களுக்கு ரூபாய் 200,000 இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளன.
காயமடைந்த நபர்களுக்கு ரூபாய் 50,000 மற்றும் காயமடைந்த அரச ஊழியருக்கு ரூபாய் 100,000 வழங்கப்படவுள்ளன. இதுதவிர தொழில் அபிவிருத்திக்காக ரூபாய் 250,000 வழங்கப்படவுள்ளதோடு இதற்கு 4 சத வீத வடடி அறவிடப்படவுள்ளது.
அண்மையில் ஐ.நா.சபையின் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு என்னைச் சந்தித்து தென்னாபிரிக்கா உட்பட பரச்சினைகளை முகம் கொடுத்த நாடுகளின் தற்போதைய அமைதி மற்றும் சமாதான நிலை பற்றி விபரித்தனர்.
புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என். புகேந்திரன், றேப்பியாவின் தவிசாளர் என். பத்மநாதன், உதவிப் ;பணிப்பாளர்களான எஸ்.எம். பதுர்தீன், வி.ஹூசைன், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் நடமாடும் சேவை நாளை களுவாஞ்சிகுடி மற்றும் புனாணை பகுதிகளில் இடம்பெறும் .



















