ஆலங்குச்சி, செங்கல், கரி, உப்பு, வேம்பு ஆகியவை கொண்டுதான் நம் மக்கள் பல் துலக்கி வந்தார்கள். சமீப காலம் வரை அடுப்புக் கரி கொண்டு பல் துலக்கும் பழக்கம் நம்மக்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் சமீப கால இந்திய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களில் பற்பசை விளம்பரங்களைப் பார்த்தால் பற்பசை நிறுவனங்கள் மத்தியில் கடும் விற்பனை போட்டா போட்டி நிலவி வருவதைக் கண்டு கொள்ள முடியும். உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா? கார்பன் இருக்கிறதா? என்ற கேள்வியுடன் விளம்பரம் தொடங்கும்.
ஞாபகப்படுத்தி பார்த்தால் இவை எல்லாம் புதிய விஷயங்கள் இல்லை என்பதையும் உப்பையும் கரியையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சமீப காலமாக ‘ஹேர்பல் டூத் பேஸ்ட்’ என்ற பெயரில் மூலிகை பற்பசைகள் நம் நாட்டில் அறிகமுகமாகி பிரபலம் பெற்றுள்ளன. இவை எவ்வளவு தூரம் மூலிகையால் ஆனவை என்பதை அலசுகிறது. இக்கட்டுரை.
படித்து முடித்தால் எதைக் கொண்டு பல் துலக்குவது என்ற கேள்வி மனதில் எழும். குழப்படைய வேண்டாம். அவதானத்துடன் இருந்தால் போதும், பற்தூரிகை எவ்வளவு நீளத்துக்கு இருக்கிறதோ அவ்வளவு நீளத்துக்கு பசையை நிரப்பிக்கொண்டு பல்லைத் தேய்க்க வேண்டாம். கொஞ்சம் எடுத்துக்கொண்டால் போதும்.
இப்போது கட்டுரையைப் படியுங்கள். உங்கள் மூலிகை பற்பசை உறையின் மீது இருக்கும் அரிய. அற்புத மூலகைகளின் படங்களைத் தாண்டி அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள் கண்ணுக்கே தெரியாதபடி மிக மிகச் சிறிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும் மூலப் பொருட்கள் பற்றிய குறிப்பை ஒருமுறை படித்தால் போதும்.... உங்கள் மூலிகை பற்பசையின் மர்மம் உங்களுக்கு விளங்கி விடும்.
அந்த பற்பசையில் என்னென்ன கலக்கப்பட்டிருக்கின்றன. தெரியுமா?
சோடியம் லாரைல் சல்பேட், சோடியம் சக்ரின், ஹைட்ரேட்டட் சிலிகா, சோடியம் ஹைட்ராக்சைட், ஜிங்க், சல்பேட், சோடியம் ஃபுளூரைட், ஃபார்மால்டிஹைட், ஹெர்பல் எக்ஸ்ட்ராக்ட்ஸ்.... சில எண் குறியீடுகள். இதில் ‘ஹெர் பல் எக்ஸ்ட்ராக்ட்ஸ்’ என்ற ஒன்றைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் மூலிகைகளா என்ன?
மேற்கண்ட இரசாயனப் பொருட்கள் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகின்றன தெரியுமா? நாம் பயன்படுத்துகிற பேஸ்ட் பற்களோடு உராய்வை ஏற்படுத்துவதற்காக கால்சியம் கார்பனேட் அல்லது சிலிகா போன்ற ரசாயனப் பொருட்கள் இலேசான இனிப்பைத் தருவதற்காக சாக்ரின் சேர்க்கிறார்கள். அந்தக் காலத்தில் சாதாரண பெட்டிக் கடைகளில் விற்கும் மிட்டாய்களிலும், குளிர்பானங்களிலும் செயற்கை இனிப்பைத் தரும் சக்ரின் கலக்கப்பட்டிருந்தால் ‘அது உடல் நலத்தைக் கெடுக்கும்’ என்று தவிர்த்து விடுவார்கள். சர்க்கரையோடு இதை சேர்த்துக் கலந்ததற்காக சில டீக்கடைகளையே புறக்கணித்த மக்கள் உண்டு. அதே சக்ரின் தான் நம்முடைய பேஸ்ட்டுகளில் கலக்கப்படும் சோடியம் சக்ரின். நுரையைத் தருவதற்காக ஃபோமிங் ஏஜென்ட்களும், ஃபுளோரைட்களும் கலக்கப்படுகின்றன.
இவ்வளவு இரசாயனங்களைக் கொண்ட ஒரு பசையைத் தான் நாம் மூலிகை பேஸ்ட் என்ற சொல்லால் செல்லமாக அழைக்கின் றோம். சாதாரண பற்பசைகளுக்கும் மூலிகை பேஸ்ட்டுகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.... 2.5% முதல் 5% அளவு வரை ஏதாவது ஒரு மூலிகைப் பொருளைக் கலப்பது மட்டும்தான் அந்த வேறுபாடு. 95% முதல் 97.5% வரை இரண்டு பற்பசைகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. மூலிகை பேஸ்ட்டுகளுக்கும், சாதாரண பேஸ்ட்டு களுக்கும் இதையெல்லாம் கடந்த ஒரு ஒற்றுமை உண்டு.... அந்த ஒற்றுமை எஸ்.எல்.எஸ். என்று அழைக்கப்படும் சோடியம் லாரைல் சல்பேட்தான். எந்த பேஸ்ட்டாக இருந்தாலும் சரி.... அழுக்கு நீக்கியாகப் பயன்படும் எஸ்.எல்.எஸ். இல்லாமல் பற்பசை தயாரிக்கப்படுவதே இல்லை.
மெக்கானிக் ஷெட்களில் தரை யில் படிந்திருக்கும் அழுக்குகளையும் கிரீஸையும் போக்குவதற்காக, இரவில் கடைசியாக ஒரு இரசாயனத்தைப் பயன்படுத்துவார்கள். பளிச்சென தரை சுத்தமாகி விடும். கார், டூ வீலர் உதிரிப்பாகங்களையும் இதே இரசாயனத்தால் கழுவும் போது விடாது ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்குகள் போய்விடும். அந்த அளவிற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனம். அரிக்கும் தன்மை கொண்ட அழுக்கு நீக்கி அந்த இரசாயனத்தின் பெயர்தான் எஸ்.எல்.எஸ். எனப்படும் சோடியம் லாரைல் சல்பேட்.
நாம் பயன்படுத்தும் எல்லா பேஸ்ட்டுகளிலும் இந்த அழுக்கு நீக்கி பயன்படுகிறது. நாம் நம்முடைய பற்களை தினமும் இந்த இரசாயனம் கொண்டுதான் கழுவுகிறோம். மூலிகை பேஸ்ட்டுகளிலும் இரசாயனங்களோடு, இரசாயனமாக எஸ்.எல்.எஸ். ஐஸ்கிரீம் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம் என்றால் அது நம் தினசரி உணவு இல்லை. எப்போதுதாவது விருப்பப்படும் போதோ, விருந்துகளின் போதே மட்டுமே சாப்பிடுவோம். இரசாயனங்கள் கலக்கப்பட்டிருந்தாலும் கூட மிக அரிதாகப் பயன்படுத்தும் பொருட்களால் உடல் அதிகம் பாதிப்படைவதில்லை. ஏனென்றால் உடலின் எதிர்ப்பு சக்தி தேவையற்ற இரசாயனப் பொருட்களை எதிர்த்து வெளியேற்றிவிடும்.
ஆனால் சிறிய அளவில் உடலை பாதிக்கும் இரசாயனம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள உணவில் இருந்தால் கூட ஆபத்து. அது தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர்ந்து நம் உடலை விஷத்தின் கருவறை ஆக்கிவிடும். அதன் பாதிப்பு வெளிப்படும் போது மிகப்பெரியதாக இருக்கும். இப்படியான அன்றாட உணவுகளைப் போலவே பற்பசையில் உள்ள இரசாயனங்களும் உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அன்றாட உணவை விட அதிகப் பயன்பாட்டில் உள்ள ஒரு பொருள் தான் பற்பசை சாதாரணமாக தினமும் ஒரு முறையாவது பல்துலக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கிறோம். சில தீவர பாதுகாப்புணர்வு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இருமுறை கூட பல் துலக்குகிறார்கள். ஒரு நாளைக்கு இருமுறை என்று தினமும் பல்துலக்கும் போது நம் உடலில் சேரும் ஃபுளூரைட, எஸ்.எல்.எஸ். போன்ற இரசாயனங்களின் பாதிப்பு மிகப் பெரியது.
பசைகளில் இன்னொரு அதிர்ச்சியான கலப்படத்தை 2011 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இயங்கும், அரசுக்குச் சொந்தமான டெல்லி இன்ஸ்டிட்யூட் ஒஃப் பார்ம சூட்டிகல் சயன்சஸ் அண்ட் ரிசர்ச் (ளியிஜிஷிதிஞி) என்ற நிறுவனம் கண்டுபிடித்தது. இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான பற்பசைகளில் மூலப் பொருட்கள் பட்டியலில் குறிப்பிடப் படாத பொருள் ஒன்றும் கலந்திருப் பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது என்ன தெரி யுமா? ‘சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும்’ என்று நாம் அறிந்திருக்கிறோம். அந்த புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்று, நிகோடின். இந்த நிகோடின்தான் நம் பேஸ்ட்டுகளில் கலந்திருக்கிறது.
குறிப்பாக ‘மூலிகை தயாரிப்புகள்’ என பெருமிதத்தோடு விற்கப்படும் பற்பசைகள் மற்றும் பல்பெடிகளில்தான் நிகோடின் அதிகம் உள்ளது. ஒன்பது சிகரெட்டுகளை புகைப்பதால் உடலுக்குள் செல்லும் நிகோடினைவிட குறிப்பிட்ட ஒரு பிராண்டின் மூலிகை பற்பசையை உபயோகித்தால் அதிகம் நிகோடின் நம் உடலுக்குள் செல்கிறது.
பற்பசை மற்றும் பல்பொடிகளில் நிகோடின் கலப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இதுபற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தால் வெளியிடப்பட்ட இந்த பட்டியல் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவரவில்லை. இணையத்தளங்களில் தேடினால் எந்தெந்த நிறுவனத்தின் பேஸ்ட்டில் என்ன அளவில் நிகோடின் கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

.jpg)