மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் நடாத்தும் சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மகாஜனக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யோகா சிகிச்சை நிபுணர் செல்லையா துரையப்பா தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வி.தவராசா, மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.தவராசா, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகத்தினால் யோகா பயிற்சி கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.
எனவே இவ் சர்வதேச யோகா தின நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு யோகா சிகிச்சை பற்றி அறிந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகத்தினர் அழைக்கின்றனர்.















