சிறுவர்
விவகார இராஜாங்க அமைச்சின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 3 முதல் 5
வயதுக்குட்பட்ட பாலர் பாடசாலைக்குச் செல்கின்ற அல்லது இதுவரை செல்லாத
சிறுவர்களுக்கு “சிறுவர் உலகில் எமது மகிழ்ச்சி” எனும் தொனிப்பொருளில் சித்திரப்போட்டியும்,
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை, 15 ஆம் திகதியளவில் சித்திரக் கண்காட்சியையும்
நடாத்துவதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர்
அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே
இப்போட்டியில் பங்குபற்ற ஆர்வமுடைய சிறார்களின் பெற்றோர் மற்றும் பாலர்
பாடசாலைகளின் நிருவாகத்தினர் எதிர்வரும் ஜூன், 30 ஆம் திகதிக்கு முன்னர் ஆலையடிவேம்பு
பிரதேச செயலக முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் அவர்களை
075 7682480 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறு அல்லது சிறுவர்
மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவிற்கு வருகைதந்து பதிவுசெய்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இப்போட்டிகளில்
முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறுவர்கள் விரைவில் இடம்பெறவுள்ள
மாவட்டமட்ட சித்திரப்போட்டிகளில் பங்குபற்றும் தகுதியைப் பெற்றுக்கொள்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.













