நேற்று
(23) முதல் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் தேசிய வீடமைப்பு வாரத்தினை
முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச திவிநெகும திணைக்களத்தின் சமுக அபிவிருத்திப்
பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “திரிய பியச” வீடமைப்புத்
திட்டத்தின்கீழ் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும்
வைபவங்கள் இன்று (24) காலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பில்
இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில்
ஆலையடிவேம்பு பிரதேச திவிநெகும திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா,
மகா சங்கப் பணிப்பாளர் ரி.பரமானந்தம் உட்பட திவிநெகும அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் திவிநெகும திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற முதல் மூன்று
வீடுகளுக்கான ஆரம்ப வேலைகள் சின்னப்பனங்காட்டிலுள்ள கவடாப்பிட்டி, அக்கரைப்பற்று -
7/2 மற்றும் அக்கரைப்பற்று - 7/3 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன்,
எதிர்வரும் காலங்களில் தெரிவு செய்யப்பட்ட ஏனைய பயனாளிகளுக்கான வீடுகள் இத்திட்டத்தின்கீழ்
அமைத்துக் கொடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.












