பாடசாலைமட்ட தகவல் முகாமைத்துவ முறை அமைப்பையும் கணனி நிலைய செயற்பாடுகளையும் வலுவூட்டும் வகையில் பட்டிப்பளை ADP வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு வலயத்தினால் பாடசாலை தகவல் தொழிநுட்ப ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தகவல் முகாமைத்துவ ஆசிரியர் இணைப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்றும்(12) இன்றுமாக(13) தன்னாமுனை மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில் வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப்பணிப்பாளர்(திட்டமிடல்), மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர்கள், கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வலயத்தில் முதற்கட்டமாக நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் 40தொழிநுட்ப ஆசிரியர்கள் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சி பட்டறையில் தரவுகள் சேகரித்தல், தரவு பகுப்பாய்வு செய்தல், தரவை இற்றைப்படுத்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கான
www.facebook.com/battiwest
ictfamily முகநூலும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.



















