இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் விவசாயக் கல்லூரிகளில் நடத்தப்படும் விவசாய உற்பத்தி தொழில்நுட்ப தேசிய டிப்ளோமா பாடநெறிக்காக 2016/2018 ஆம் கல்வியாண்டுகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குண்டசாலை, வவுனியா, அங்குணபெலஸ்ஸ, பெல்வெஹர, கரப்பிஞ்ச ஆகிய விவசாயக் கல்லூரிகளில் இது தொடர்பாக பாடநெறிகள் நடத்தப்படும். இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் போட்டிப் பரீட்சை மூலம் தகுதியானோர் தெரிவு செய்யப்படுவர்.
க.பொ.த. உயர்தர உயிரியல் பிரிவில் சித்தியடைந்த 17 வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப்பாடநெறிக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவுகள் மாவட்ட அடிப்படையிலும் தேசிய அடிப்படையிலும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.