
சா.(நடனசபேசன்)
கிழக்குமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) துறைநீலாவணை பொது மருத்துவமாது விடுதியின் நுழைவாயிலை அழகுபடுத்துவதற்கு நிதி வழங்கிவத்துள்ளார்
துறைநீலாவணை சமூகப் பொருளாதார கல்வி அபிவிருத்தி அமையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவ்விடுதியின் நுழைவாயிலை அழகுபடுத்துவதற்காக மாகாணசபை உறுப்பினர் 04 திகதி வியாழக்கிழமை நேரில் வந்து பார்வையிட்டதுடன் அதற்கான நிதியினை அவ்வமைப்பின் தலைவர் பொறியியலாளர் விஜயரதனிடம் கையளித்துள்ளார்
இந் நிகழ்வில் அவ்வமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை இக்கிராமத்தின் மீதும் தமிழ் தேசியத்திற்காகவும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் மாகாணசபை உறுப்பினர் அவர்களுக்கு அவ்வமைப்பும் துறைநீலாவணை மக்களும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்















