அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்து


கிருதஞ்ஞன் -
அம்பாறை மாவட்டத்தில், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் வூஸ்க்(கனேடிய உலக பல்கலைகழக சேவை )  நிறுவனம், அறுகம்பே ரூரிஸ்ட் அமைப்பு மற்றும் சுவாட் நிறுவனங்களுக்கு இடையிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது..

WUSC (World University Service of Canada) இலங்கையில் மிக நீண்ட காலமாக பின்தங்கிய   இளைஞர் யுவதிகளுக்கு அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தொழில் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. இன் நிறுவனம் தனது புதிய திட்டமான ASSET (Advance Specialist Skill for Economic Transformation)  திட்டத்தின் கீழ் இலங்கையில் தனியார் துறையில் இளைஞர், யுவதிகளுக்கு அதிக தொழில் வாய்ப்பை வழங்க கூடிய துறைகளான (Truism & hospitality, ICT, Construction, automotive/mechanical) போன்ற துறைகளில் காணப்படும் தொழில்  வாய்ப்புக்களை அடையாளம் கண்டு இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்று கொடுக்கும் நோக்கில் தனது செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக Truism & hospitality துறையில் அறுகம்பே கொட்டல்களில் காணப்படும் 120 தொழில் வாய்புக்களை அடிப்படையாக வைத்து தொழில் திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கி வேலைக்கு அமர்த்தும் நோக்கில் WUSC, Arugambay Tourist Association மற்றும் SWOAD நிறுவனங்களுக்கு இடையில்லான உடன்படிக்கை  கடந்த 24.06.2015 அன்று  சுவாட் கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

 இன் நிகழ்வில் WUSC நிறுவன இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி எஞ்சல் அம்மையார், WUSC நிறுவன கிழக்கு மாகாண குழுத் தலைவர் திரு. யோகேஸ்வரன், Arugambay Tourist Association தலைவர் ஜனாப் ரகீம் , SWOAD நிறுவன தலைவர் திரு பரமசிங்கம், உதவி பிரதேச செயலார் பொத்துவில்இ திட்டமிடல் பணிப்பாளர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம், நிறுவங்களின் இணைப்பாளர் கச்சேரி அம்பாறை, உதவிப் பணிப்பாளர் அம்பாறை, தொழில் பயிற்சி அதிகார சபை, WUSC நிறுவன திறன் மற்றும்  பயிற்சி முகாமையாளர் திரு டென்சில் WUSC நிறுவன அம்பாறை  மாவட்ட சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகஸ்தர் திரு ஜேசுசகாயம்,திருகோணமலை  மாவட்ட WUSC நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகஸ்தர் கவிதா  மற்றும் WUSC நிறுவன ஊழியர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 தொழில் பயிற்சியின் பின்னர் அனைவரும் அறுகம்பே கொட்டல்களில் தொழில்  வாய்ப்பை பெற உள்ளனர் எனபது விசேட அம்சமாகும்.