மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பழைய மாணவர்களுக்கிடையிலான வருடாந்த மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாட்டாளிபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகள் அனைத்தும் சென்ரலைட் விளையாட்டுக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கச் செயலாளர் கேட்டுள்ளார்.












