அகில இலங்கை வங்கி ஊழியர் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் நேற்று(31) ஞாயிற்றுக்கிழமை வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் மாவட்ட தலைவராக ஏ.சர்வவேந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
இவர் கடந்த 02.04.2015ல் நடைபெற்ற மக்கள் வங்கி கிளைச் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு பல தடைகளையும், சவால்களையும் சூழ்ச்சிகளையும் தாண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டிருந்தார்.
அத்துடன் அகில இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த தொழிற்சங்க ஊழியராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். என மட்டக்களப்பு பிராந்திய இலங்கை வங்கி ஊழியர் சங்க ஊடகப் பொறுப்பாளர் குறிப்பிட்டார்.















