துறைநீலாவணை பொது மருத்துவ மாது விடுதியின் நுழைவாயில் அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை கி.மா.உ ஜனா பார்வையிட்டார்


(சா.நடனசபேசன்)
துறைநீலாவணை பொது மருத்துவ மாது விடுதியை அழகுபடுத்துவதற்காக கிழக்குமாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களால் நிதிவழங்கப்பட்டு  அதன் மூலம் நடைபெறும் வேலைத்திட்ங்களை மாகாணசபை உறுப்பினர்  சனிக்கிழமை மாலை பார்வையிட்டார்
துறைநீலாவணை சமூகப்பொருளாதார கல்வி அபிவிருத்தி அமையத்தின் வேண்டுகோளில் துறைநீலாவணை பொது மருத்துவ மாது விடுதியை அழகுபடுத்துவதற்காக கிழக்குமாகாணசபை உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரனால்  (ஜனா) நிதி வழங்கப்பட்டடு  அழகுபடுத்தும் ;வேலைத்திட்டம் அவ் அமையத்தின் தலைவர் பொறியியலாளர்  கே.விஜயரதன் தலைமையில் நடைபெற்று வருகின்றது
இதனை மாகாணசபை உறுப்பினர் நேரடியாக வருகைதந்து பார்வையிட்டதுடன்  மேலும் பலசெயற்பாடுகளுக்கு நிதி வழங்குவதாக மாகாணசபை உறுப்பினர் உறுதியளித்துள்ளார்
அதேவேளை துறைநீலாவணைக்கிராமத்திற்கு பல்வேறு விதத்திலும்  உதவிகளை வழங்கிவருகின்ற மாகாணசபை உறுப்பினருக்கு துறைநீலாவணை சமூகப்பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர