கன்னங்குடா உதயதாரகை விளையாட்டுக் கழகத்தின் புதிய நிருவாகசபை

மட்டக்களப்பு கன்னங்குடா உதயதாரகை விளையாட்டுக் கழகத்தின் நிருவாகசபைக் கூட்டத்தின்போது புதிய நிருவாகசபை தெரிவுசெய்யப்பட்டது.

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் தலைவராக நாகலிங்கம் உருத்திரமூர்த்தியும் செயலாளராக நா.சஞ்சீவனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் இக் கழகத்தின் புதிய பொருளாளராக பா.இன்பராசா மற்றும் ஐந்து பேர் கொண்ட நிருவாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பகுதி உறுப்பினர்கள் என பலர் தெரிவுசெய்யப்பட்டனர்.

புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட நா.உருத்திரமூர்த்தி கழகத்தின் எதிர்கால செயற்பாடு பற்றி தெரிவிக்கையில், உதயதாரகை விளையாட்டுக் கழகத்தை கடந்த காலத்தைப்போல் ஒற்றுமையுடன் வழிநடத்தி, விளையாட்டுக்களில் மேலும் சாதனை படைக்க முன்னின்று உழைப்பேன் என எமக்கு கருத்துத் தெரிவித்தார்.

கன்னங்குடா கிராம வியைாட்டு வீரர்கள் கடந்த காலங்களில் மாகாண மட்டத்திற்கும் தேசிய மட்டத்திற்கும் பல போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.