(கௌரீசன்) மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் நடத்துகின்ற B பிரிவு கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று பிற்பகல் 4:00 மணிக்கு மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டச் சங்கத் தலைவர் திரு.எஸ்.உதயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக B பிரிவிலுள்ள 16 கழகங்களும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழு நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் புள்ளியடிப்படையில் முதலிடத்தைப் பெற்ற கழகங்கள் அரையிறுதிக்குத் தெரிவாகி அரையிறுதியில் வெற்றியடைந்த கழகங்கள் இரண்டும் இவ்விறுதிப் போட்டியில் பங்குகொள்கின்றன.
இந்த வகையில் புன்னைச்சோலை கோப்றா கழக அணியும், மாமாங்கம் ரெட்ணம் கழக அணியும் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன. இவ்விறுதிப் போட்டியில் வெற்றி பெறும் கழகம் 2016 ஆம் ஆண்டு A பிரிவிற்கு தரமுயர்த்தப்படும் கழகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இறுதிப் போட்டியையும் பரிசளிப்பு விழாவையும் சிறப்பிக்க பிரதம அதிதியாக இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தின் உபதலைவரான திரு.எஸ்.அன்ரனிப்பிள்ளை அவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களுக்கு பந்து வழங்கும் வைபவமும் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.