வவுணதீவில் போதைப்பொருள் பாவனை மற்றும் நீர்வெறுப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அலுவலகமும் இணைந்து புகைத்தல்,மதுபாவனை மற்றும் விலங்குகளின் நீர்வெறுப்பு(விசர்) நோய் போன்றவற்றினால் சமூகத்திற்கு ஏற்படும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் 85 மாணவர்கள் பங்குபற்றிய இந் நிகழ்வில், போதைப்பொருட்களின் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள்,தாக்கங்கள் பற்றியும் விலங்குகளுக்கு ஏற்படும் நீர்வெறுப்பு(விசர்)நோய்யினால் மனிதர்களுக்கும் சமூகத்திக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி விரிவாக வளவாளர்களினால் கருத்திரைகள் வழங்கப்பட்டது.


இதன்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நீர்வெறுப்பு நோய் தடுப்பு பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர் பி.ரவிச்சந்திரா, வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அலுவலக சமேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.விமலசேகரன், நாவற்காடு பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பி.முருகதாஸ் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் காலந்துகொண்டனர்.