சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தின இறுதிநாளை முன்னிட்டு, கல்லாறு வாழ்வின் எழுச்சி வங்கி ஏற்பாடு செய்த பேரணி

 (ரவிப்ரியா)
 தேசிய ரீதியல் மே 30 தொடக்க  ஜுன் 10ந்திகதி வரை சர்வதேச புகைத்தல் எதிர்ப்ப தினம் 'என்றும் போதையற்ற பழக்கம் நாட்டுக்குத் தேவை' என்ற தொனிப் பொருளில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதிநாளான நேற்று புதன்கிழமை
மண்முனை தென் எருவில் பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு இடங்களில் பேரணிகள் இடம்பெற்றன. அதன் ஒரு அம்சமாக  கல்லாறு வாழ்வின் எழுச்சி  வங்கி கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, துறைநீலாவணை 14 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவை உள்ளடக்கி நடாத்திய பேரணி உதயபுரம் தமிழ் வித்தியாலய அதிபர் ஆசிரியர்களின் பங்களிப்புடன் வாழ்வின்  எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் வே.வரதராஜன் தலைமையில் நடைபெறுவதையும் வங்கி முகாமையாளர் பி.தவேந்திரன். சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.உதயசுதன் ஆகியோரையும் வாழ்வின் எழுச்சி பயனாளிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரையும் படங்களில் காணலாம். இப் பேரணி உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் இருந்த ஆரம்பமாகி கல்லாறு வாழ்வின் எழுச்சி வங்கி முன்றலில் முடிவடைந்தது.