பண்டாரியாவெளி
ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம் பல வரலாற்று பெருமையும் சிறப்பும் தன்னகத்தே
கொண்டது. மண்முனையில் குடியேறிய ஏழு குடி மக்களுள் சிலர் முதலாவதாக
குடிபுகுந்த வரலாறும் பாரம்பரியமும் கொண்ட பூர்வீக பூமியே பண்டாரியாவெளி (பண்டையூர்) என்னும் தமிழ்-சைவ கிராமமாகும்.
கதிர் சென்னல் கனகம் என பண்ணிசைக்க
வற்றாத நதி வளைந்து வல்லமையை கால்கழுவ
பண்டு முறை மன்னர்புகழ் பண்டாரியாவெளி பத்தியில் உறை
எங்கள் திருவுருவான தாய் நாகசக்தி..
படுவான்
தமிழகத்தின் மையபகுதியாக விளங்கும் பண்டாரியாவெளி கண்ணே ஆண்டாண்டு காலம்
அடியாரின் அல்லல்கள் நீக்கி அருள்பாலிக்கும் ஆதிநாதராம் எங்கள் நாகத்தாய்.
அருளுக்கு வித்தாகி ஆனந்தம் பொங்குமிடம்
அற்புதங்கள் பல காட்டி தெய்வீகம் வாழுமிடம்
உருவாக்கும் இறையோன் உலகமெல்லாம் நிறையுமிடம்
ஓங்கார மெய்பொருளாய் தன்குறவே தங்குமிடம்
நாகவடிவாக வந்து நலம் காட்டி எமை ஆழ
நாகம்மை கோவில் கொண்ட தேன்காமலளும் திருவிடமாம்
எங்கள் கண்கண்ட தெய்வமான
மண்கொண்ட நாகசக்தி...
வாழ்கின்ற நன் நாளில் வளமான சீதனத்தை குழந்தைக்கீர்ந்து
நகர்ந்து வெளி சென்றதனால் தெய்வமாகி
பண்டாரியார் சூள்திலங்கி ஆட்சி செய்தார்
ஆண்டுகள் வருகின்ற உத்தரமாமம் ஆனி தன்னில்
எடுக்கின்றோம் பொங்கல் உந்தனக்கு பால்பழம் தனைவைத்து
1896
ஆண்டு முதல் மூல மூர்த்தி மற்றும் பரிபாலன தெய்வங்களுக்கான ஆலய கட்டுமான
பணி ஆரம்பிக்கபட்டு பாரம்பரிய முறையிலும் ஆகம முறையிலும் வழிபாடுகள்
இடம்பெறுகின்றன. குறிப்பாக நாகத்துக்கு பால்பழம் மற்றும் முட்டை வைத்து
வழிபாடுகள் மிக எளிமையான முறையில் இடம் பெறுகின்றது. ஆனியுத்தர தரிசன
நாள்களில் பால்பழம் வைக்கும் நிகழ்வு மிக பிரதானமான கைங்கரியமாக
அடியார்களால் கொண்டாடப்படுகின்றது ஆனியுத்தர தரிசனத்தில் பல பாகங்களிலும்
இருந்து நாகங்கள் பால் பழம் உண்பதை அடியார்களால் காணமுடிகின்றது. பிரதான
புற்றில் வாழும் நாகங்கள் இவ் ஆலயத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான
காஞ்சரிகை மரத்திலும் வாழ்ந்துவருகின்றன.
1896
ஆம் ஆண்டு முதல் அயல் கிராம மக்களையும் இணைத்து மொத்தமாக ஆறு
கிராமமக்களும் தேசமாக சபையின் மூலமாக நிர்வாகம் செய்யபடுகின்றது. தேசமகா
சபையின் தர்மகத்தாவாக (தலைவர்) பண்டாரியாவெளியின் குடிமகன்
தெரிவுசெய்யபடுகின்றார்.
இவ்வாறு
சிறப்புக்கள் பொருந்திய நாக சக்தியின் குடமுழுக்கு பெரும்சாந்தி மஹா
கும்பாவிசேக நிகழ்வு மிக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. பல இலட்சம்
பெறுமதியில் இவ் ஆலய கட்டிட பணி நிறைவுபெற்றுள்ளது. இக்கோயின் பல
நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் கலையம்சம் பொருந்திய சிலைகளும் கட்சிதமான
முறையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஆலய கற்பகிரகத்தில் நாகம்மையுடன் நாகம்
எவ்வாறு இவ் ஆலயத்தை வந்தடைந்தது என்பன பற்றியும் அலங்கார மண்டபம் மற்றும்
கிழக்கு வாசல் என்பவற்றில் விஷ்ணு சிவபிரான் போன்றோரின் ஐதீக புராண
காட்சிகள் சித்தரிக்கபட்டுள்ளன.
வேரூன்றி உலகெல்லாம் வியாபித்த இறைவன்
நீரோட மீன்பாடி நெல்லாடும் நாட்டில்
புற்றுறைந்து படமடி பாண்டையுர் அது கொண்டு
பார்போற்ற புகழ்பெற்று பல்லாண்டு வாழ்வோம்
அடியார்கள்
அனைவரையும் நாகசக்தியின் குடமுழக்கு பெரும்சாந்தி மஹா கும்பாவிசேகம்
நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு இறை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆலய பரிபாலன சபை
பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம் (நாககட்டு)












