பாடசாலையில் தீ விபத்து ! கணனிகள் தீக்கிரை

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் மகா வித்தியாலயத்திலுள்ள கணணி வள தொழிநுட்ப நிலையம்  தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த கணனிகள் தீக்கிரையகியுள்ளன .
பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களும் இணைந்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் . மின்னொழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாம் என்று திருக்கோவில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 இந்த தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.