(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
தீப்பற்றியதால் குடும்பப் பெண்ணொருவர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு நேரம் வீட்டுவேலைகளைச் செய்து கொண்டிருக்கும்போது எரிந்துகொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்து உடையில் தீப்பற்றிக் கொண்டதில் இப்பெண் படுகாயமடைந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் 5 ஆம் குறிச்சி தோம்புதோர் வீதியில் வசிக்கும் பாலேஸ்வரன் ரசிகலா (வயது 35) என்பவரே தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.