முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் சமூக அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பயிற்சிநெறி

(எஸ்.சதீஸ்)
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் அரச முன்னிலை கள உத்தியோகத்தர்களுக்கான சமூக அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய பயிற்சிநெறி இன்று வியாழக்கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் திருமதி.கவிதா உதயகுமார் தலைமையில் இந் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

​ஜெய்கா (JICA) நிறுவனத்தின் அனுசரணையுடன்  மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய பிராந்திய நிலையத்தில் இடம்பெற்ற இப் பயிற்சி நெறி இம்மாதம் நான்கு நாட்களும் எதிர்வரும் யூலை மாதம் ஆறு நாட்களுமாக 10 நாட்கள் கொண்டதாக இடம்பெறவுள்ளது.

வௌிக்களத்தில் சேவையாற்றும் முன்னிலை உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை இலகுவில் வினைத்தறனுடன் சிறப்பாக மக்களுக்கு வழங்கும்பொருட்டு இப் பயிற்சிநெறி ஒழுங்குசெய்து வழங்கப்படுகின்றது.


முன்னிலை கள உத்தியோகத்தர்களுக்கான சமூக அபிவிருத்தி தொடர்பான இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை,கிரான்,வவுணதீவு ,பட்டிப்பளை மற்றும் வெல்லாவௌி ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 60 வௌிக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், மட்டக்களப்பு மாவட்டச்செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், ஜெய்கா (JICA) திட்ட இணைப்பாளர் ஐ.இசா (Imazato.Isa), பிரதேச செயலாளர்களான என்.சத்தியானந்தி, ஆர்.ராகுலநாயகி போன்றோர் கலந்துகொண்டனர்.