யானை தாக்கி ஒருவர் பலி

( படுவான் பாலகன்) சாமந்தியாறு - நெல்லிக்காட்டில் வைத்து இன்று(10) அதிகாலை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 உயிரிழந்தவர் கொக்கட்டிசோலையை சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான சற்குணம் இராசதுரை வயது 62 என இனங்காணப்பட்டுள்ளது.

இவர் குறித்த சாமந்தியாறு - நெல்லிக்காட்டில் சேனைப் பயிர் செய்து வந்துள்ளார். அங்கு வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.