ரயிலில் மோதுண்டு இளம்பெண் மரணம் ! மற்றொரு யுவதி படுகாயம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் , ஏ.எம் றிகாஸ்)

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி வந்தாறுமூலை புகையிரதக் கடவையில் புகையிரதத்தில் மோதுண்டு இளம் பெண் மரணமடைந்தததோடு மற்றொரு யுவதி காயமடைந்த சம்பவம் ஞாயிறு மாலை 3.30 மணிக்கு இடம்டபெற்றுள்ளது

களுவன்கேணி காளிகோயில் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நிஷாந்தினி (வயது-26) என்பவரே மரணித்துள்ளார்.
அமரசிங்கம் பிரியதர்ஷினி (வயது 23) என்பவர் காயமடைந்து செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த யுவதிகள் இருவரும் களுவன்கேணியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்தாறுமூலை நோக்கி வந்து கொண்டிருந்த போது கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்'டிருந்த புகையிரதத்தில் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த யுவதிகள் இருவரும் பிரத்தியேகமாக தாதியர் பயிற்சி பெற்றவர்கள் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை செய்கின்றனர்.