மட்டக்களப்பு Oxford கல்லூரியி்ன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு ஒக்போர்ட் (Oxford)கல்லூரியில் பாடநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் கடந்த  ஞாயிறு 31ம் திகதி இடம்பெற்றது.

கல்லூரியின் பணிப்பார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக வைத்திய கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலாநிதி.கே.ரி.சுந்தரேசன்,மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் ஏ.எஸ்.யோகராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜீ.சிறிநேசன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.தயாசீலன், உதவி கல்விப் பணி்பாளர்களான கே.சந்திரகுமரன்,எஸ்.சந்திரகாசன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்விலே பாடநெறிகளை நிறைவுசெய்த 175 மாணவர்கள்  மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்துள்ளனர். 

இம் மாணவர்களுக்கான சான்றிதழ்களை இங்கு வருகைதந்த அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.