கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு - புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
இன்று மாலை ஆரம்பமான சடங்கு உற்சவம் எதிர்வரும் 12ம் திகதி வௌ்ளிக்கிழமை நிறைவுபெறவுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி விசேட நிகழ்வாக அம்பாளின் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெறும்.
12ம் திகதி வௌ்ளிக் கிழமை அம்பாளின் தீ மிதிப்பு வைபவம் பி.ப 4.00 மணிக்கு இடம்பெறும்.
உற்சவ காலங்களில் பகல் பூசைகள் 2.00 மணிக்கு இடம்பெறும் எனவும் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் அனைவரும் வருகைதந்து அம்பாளின் அருளைப் பெறுமாறு ஆலய நிருவாகிகள் அழைத்துள்ளனர்.












