அரசடிப் பிரிவில் நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு வடிகான்களை புனரமைக்கும் பணி

(Sivam)
மாரி காலத்தில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நீர் தேங்குவதனால் பெருகும் நுளம்புகளைக்  கட்டுப்படுத்தும் நோக்கோடு வடிகான்களை புனரமைக்கும் பணிகள் இன்று புதன்கிழமை (17) அரசடிப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தில் மாநகர சபைக்குட்பட்ட 48 கிராம சேவக பிரிவுகளிலும் வீதிகள் மற்றும் வடிகான்கள்  புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

175 மீற்றா நீளமும் 2 அடி அகலமும் கொண்ட அரசடிப் பிரிவுக்குரிய இக்கானை புனரமைப்பு செய்வதற்கு ரூபாய் 1 மில்லின் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

குறித்த கான் அமைக்கும் பிரதேசத்தில் சில குடியிருப்பாளர்கள் வீட்டின் மதிள்களை பழைய கானின் மேல் கட்டி வைத்திருப்பதனால் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுப்பதாகவும் பொது மக்கள் ஒத்துளையாமல் உள்ளது வேதனையளிப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.