( கதிரவன் ) கிராமப்புறங்களில் பல ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்பட நகர் புறத்தில் சில பாடசாலைகள் தேவைக்கு அதிகமாக உள்ளனர். செல்வாக்குகள் காரணமாக சில ஆசிரியர்கள் இடமாற்றங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இனி வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு கிழக்கு மாகாண கல்வி பண்பாடு விளையாட்டு தகவல்தொழிநுட்ப அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.திருகோணமலை வலயக் கல்வி அலவலகத்தின் நித்திலம் சஞ்சிகை வெளியீடும். உயர்தர பரீட்சையில் திறமை காட்டி சித்தியடைந்த மாணவர்கைளப் பாராட்டம் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை 23.06.2015 மாலை 2.45 மணிக்கு உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் நடைபெற்றது. வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.மனோகரன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் வைபவத்தில் திருகோணமலை மறை மாவட்டத்தின் ஆயராக செயற்பட்ட அதி வந்தனைக்குரிய கலாநிதி யொசபெ; கிங்ஸ்லி சுவாம்பி;ள்ளை அவர்களின் சேவையினை பாராட்டியும், அண்மையில் புதிய மறை மாவட்ட அயராக திருநிலைப்படுததப்பட்ட நோயல் இமானுவெல் அவர்களை வரவேற்றும் அவர்கள் இருவரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்குமாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,கடந்த காலங்களில் கல்வி புலத்தில் செல்வாக்கு மோலோங்கி காணப்பட்டது. இதனால் சில பாடசாலைகள் நன்மையை அடைய பல பாடசாலைகள் புறந்தள்ளப்பட்டன. புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்கள்தாங்கள் நியமனம் பெற்ற பாடசாலையில் கற்பிக்காது அதிகாரிகளின் துணையுடன் வசதியான பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளனர்.
விரைவில் நியமனம் பெற உள்ள ஆசிரியர்கள் தாங்கள் நியமனத்தின் போது குறிப்பிட்டப்பட்டுள்ள பாடசாலைகளில் குறித்த சேவைக்காலம் முடியும் வரை கடமையாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் இடமாற்றஙகள் வழங்கப்பட மாட்டர்து என்று குறிப்பிட்டார்.


















