நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியை எதிர்த்து ஆடிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கிரிக்கட் அணி 26 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்ற அரசாங்க அதிபர் சவால் கிண்ணச் சுற்றுப் போட்டியில் பிரதேச செயலகங்கள், திணைக்களங்கள் அடங்கிய 19 அணிகள் போட்டியிட்டன.
நேற்றைய தினம் திங்கட்கிழமை (22), உதவி மாவட்டச் செயலாளர் எஸ் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்- காணி திருமதி ஜே.திருச்செல்வம், உதவி மாவட்டச் செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன் ஆகியோர் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
வருடா வருடம் நடைபெறும் வகையில் இவ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சாவால் கிண்ணச் கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.












