மட்டக்களப்பு WinSYS Networks நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம் 14.06.2015 அன்று ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் மட்டக்களப்பு முகாமையாளர் ம.விக்னராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக WinSYS Networks நிறுவனத்தின் பணிப்பாளர் ஷியாம் ஆப்தீன் அவர்களும், மட்டக்களப்பு கல்லியியல் உப பீடாதிபதி திருமதி.தி.யுவனேஸ்வரி அவர்களும், மட்டக்களப்பு வர்தகசங்க மற்றும் வர்த்தக சம்மேளன தலைவரான மு.செல்வராஜா அவர்களும் மற்றும் WinSYS Networks நிறுவனத்தின் திட்டமிடல் அதிகாரி நிப்ராஸ் அலி அவர்களும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் நடாத்தப்படும் நெட்வேக் தொழில்நுட்ப பரீட்சைகளான MCP மற்றும் MCSA பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு WinSYS Networks கிழக்கு மாகாண மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது அமெரிக்காவிலிருந்து மைக்ரோசாப்ட் 15வருடகால பயிற்றுவிப்பளரும் மட்டக்களப்பு WinSYS நிறுவனத்தின் ஆலோசகருமான மைக் ஹமூண்ட் அவர்கள் இணையத்தின் மூலம் மாணவர்களுக்கு வாழ்த்தினையும், சிறப்புரையினையும் வழங்கினார்
நிகழ்வானது கிழக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகும், இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து Network Engineering மற்றும் மைக்ரோசாப்ட் பரீட்சைக்கு தோற்றிய சுமார் 40 மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் என்பன வழங்கப்பட்டதுடன், இம் மாணவர்களைப் பயிற்றுவித்த மட்டக்களப்பின் பிரபல நெட்வேக் துறையின் பயிற்சிவிப்பாளர் ம.விக்னராஜ் அவர்களை பெற்றோர்களும், அதிகாரிகளும் தங்களது பாராட்டினைத் தெரிவித்தனர்

























