கஞ்சாவுடன் பெண் கைது

விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்த பெண்ணொருவரைத் தாம் வெள்ளிக்கிழமை (26) கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியிலிருந்து மைலம்பாவெளிக்கு வந்துகொண்டிருந்தபோது செங்கலடிச் சந்தியில் வைத்து தாம் இந்தப் பெண்ணை 20 கிராம் கஞ்சாவுடன் கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

ஏறாவூர் மைலம்பாவெளியைச் சேர்ந்த  குடும்பப் பெண் ஒருவர் கஞ்சா கடத்தி வருவது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்ததைத் தகவலையடுத்தே குறித்த பெண்ணை கைது செய்ததாகவும் இது விடயமான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.