திருகோணமலையில் உலகசுற்றாடல் தினம்

(கதிரவன்)
உலகசுற்றாடல் தினம் 05.06.2015 அனுஸ்டிக்கப்பட்டது.

கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் முகாமைத்துவ திணைக்களம், சுற்றாடல் திணைக்களம்,  வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுடன் இணைந்து சனிக்கிழமை 06.06.2015 நிலாவெளியில் புறாமலை தீவை பாதுகாப்போம் என்னும் பெயரில் செயற்திட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.


திருமலை வலய கல்வி பிரிவில் உள்ள 9 பாடசாலை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 20 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நிலாவெளி கடற்கரையில் எளிமையான வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் . பாடசாலைகள் ஒன்பதுக்கு தலா 10,000 ரூபாய்களும் வழங்கி வைக்கப்பட்டது.
கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் சந்திரகீர்த்தி பிரதம அதிதியாக இதில் பங்கு கொண்டு கண்காட்சியினைத் திறந்து வைத்தார்.  திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ந.பிரதீபன், குச்சவெளி பிரதேச  செயலாளர் ப.தனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.