சவூதி அரேபிய இளவரசரான அல்வலீத் பின் தலால் தனது 3200 கோடி டொலர் (சுமார் 420,000 கோடி ரூபா) சொத்துக்கள் முழுவதையும் அறக்கட்டளைகளுக்கும் தொண்டர் அமைப்புகளுக்கும் நன்கொடையாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
60 வயதான இளவரசர் அல்வலீத் பின் தலால், உல கின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் .. 34 ஆவது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது.
ஆடம்பர விமானங்கள், உல்லாசப் கப்பல்கள் என ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர் இவர்.
எனினும், தனது 3,200 கோடி டொலர் சொத்துகளை யும் எதிர்வரும் வருடங்களில் நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் தெரிவிவத்துள்ளார்.
ஏற்கெனவே 350 கோடி டொலர் (சுமார் 45,855 கோடி ரூபா) சொத்துகளை தான் தொண்டர் அமைப்புகளுக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவிததுள்ளார்.
நன்கொடைகளை வழங்கும் நட வடிக்கையை தான் 3 தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததாகவும் அது தனது இஸ்லாமிய நம்பிக்கைகளின் உள்ளார்ந்த ஒரு பகுதி எனும் புனித ரமழான் மாதத்தில் இளவரசர் அல்வலீத் பின் தலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
அமெரிக்க கோடீஸ்வரர்களான பில் கேட்ஸ், வாரென் பஃபெட். மார்க் ஸுக்கர்பேர்க், மைக்கல் புளூம்பேர்க் போன்றோரும் ஏற்கெனவே இத்தகைய நன்கொடைகள் குறித்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசொப்ட் நிறுவன ஸ்தாபகர் பில்கேட்ஸ் மற் றும் அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் 1997 ஆம் ஆண்டு கேட்ஸ் பௌண்டேஷன் எனும் அமைப்பை ஸ்தாபித்து நன்கொடைகளை வழங்க ஆரம்பித்தமை தனக்கு உந்துதலாக இருந்தாகவும் அவர்களுடன் சுகாதார நலன்புரித் திட்டங்களுடன் தனது நிறுவனங்கள் பங்காளராக உள்ளதாகவும் இளவரசர் அல்வலீத் பின் தலால், தெரிவித்துள்ளார்.
இவர் சவூதி அரேபிய அரசாங்கத்தில் உயர் பதவிகள் எதனையும் வகிக்கவில்லை. கிங்டன் ஹோல்டிங் கம்பனி எனும் நிறுவனத்தின் தலைவராக விளங்குகிறார்.
தி ஃபோர் சீசன்ஸ், பெயார்மொன்ட், ரஃப்பல்ஸ், நிவ்ஸ்கோர்ப், சிட்டிகுருப், அப்பிள் முதலான நிறுவனங்களில் அவர் பங்குகளை கொண்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அல் சௌத் தின் புதல்வியான தலால் பின் சௌத்தை திருமணம் செய்திருந்த இளவரசர் அல் வலீத் தலாலுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
பின்னர் தனது மனைவியான டலால் பின் சௌத்தை இளவரசர் அல் வலீத் விவா கரத்து செய்தார்.
அமீரா அல் தவீல் என்பவரை இரண்டா வது மனைவியாக அவர் திருமணம் செய்தார். பின்னர் இவர்கள் விவாகரத்து செய்தனர்.