ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் பின்பே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் கட்சியின் தவிசாளர் மலிக் சமர விக்கிரம ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டிருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் முஸ்லிம் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம்களின் சம கால பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டன. இறுதியில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இரு கட்சிகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தலில் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடவே தீர்மானித்திருந்ததாகவும் சில அனுகூலங்களை கருத்திற் கொண்டே ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்ததாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீடம் ஒன்று கூடி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்கும் ஏற்பாடாகியிருந்தது.