(ஹுஸைன்)மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிலுள்ள கிராம நீதிமன்ற வீதியில் கஞ்சாவைத் தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை திங்கள் இரவு தாம் கைது செய்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குப்; பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றையடுத்து தாம் திடீர்ச் சோதனை செய்து 22 கிராம் கஞ்சாவைத் தம் வசம் வைத்திருந்த நபரைக் கைது செய்ததாகப் பொலிஸார் மேலும் கூறினர்.
கிராம நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.












