அறிமுகமில்லாத பெண்ணின் இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தி பணத்தை பெற்றுக் கொண்டு நம்பிக்கை துரோகம் செய்த நபரெருவரை அக்கரைப்பற்று பொலிசார் கடந்த ஞயிற்றுக்கிழமை (05) மாலை கைது செய்தனர்.கைது செய்த நபரை மறுநாள் திங்கட்கிழமை (06) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு கொள்ளையடித்த 24 ஆயிரம் ரூபா பணத்தை நீதிமன்றில் ஒப்படைத்ததையடுத்து நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸீல் ஆயிரத்து ஐநூறு ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது அக்கரைப்பற்று 8 ஆம் கட்டை வாங்காமம் பிரதேசத்தை சேர்ந்த அக்பர் றஸ்மியா என்பவர் அக்கரைப்பற்று மக்கள் வங்கியில் இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தி பணம் பெறுவதற்காக வந்துள்ளார்.இதன்போது வங்கிக்கு அருகில் நின்ற நபரெருவரிடம் குறித்தபெண் ஏ.ரி.எம். ஊடாக 16 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துதருமாறு அட்டையையும் இலக்கத்தையும் கொடுத்து உதவிகோரியுள்ளாhர்.
இச்சந்தர்ப்பத்தில் குறித்த நபர் பெண்ணுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் 40 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்து 24 ஆயிரம் ரூபாவை அவர் எடுத்துக்கொண்டு மீதி 16 ஆயிரத்தையும் பெண்ணிடம் கொடுத்துள்ளான்.
பின்னர் இதனை அறிந்து கொண்ட பெண் அக்கரைப்பற்று பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.பொலிசார் நீதிமன்ற உத்தரவைப்பெற்று மக்கள் வங்கியின் ஏ.ரிஎம்.இயந்திரத்தின் கமராவில் இருந்து குறித்த நபரை அடையாளம் கண்டு அதன்
பின் குறித்த நபரை கடந்த 5ஆம் திகதி கைது செய்து மன்றில்
ஆஜர்படுத்தினர்.குறித்த நபர் அக்கரைப்பற்று 13ஆம்பிரிவு காதிரியா வீதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.












