ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவினால் ஜூலை, 9 முதல் ஆகஸ்ட், 8 ஆம் திகதிவரை
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு மாதத்தை முன்னிட்டு எதிர்வரும்
வெள்ளிக்கிழமை (10) நாடு
முழுவதிலுமுள்ள எல்லா மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள்
அமைச்சின் செயலாளர் எஸ்.டி.ஏ.பி. பொரலஸ்ஸவினால் கடந்த திங்கட்கிழமை (06)
வெளியிடப்பட்டுள்ள 07/2015 ஆம் இலக்கச் சுற்றறிக்கையின் பிரகாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல் ஞாயிற்றுக்கிழமை (12) வரை நாட்டிலுள்ள அனைத்து
மதுபானசாலைகளையும் குறிப்பிட்ட மூன்று தினங்கள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பணிக்கப்பட்டிருந்தனர்.
ஆயினும் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட 07/2015(i) ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புதிய சுற்றறிக்கையின்படி தேசிய போதைப்பொருள் தடுப்பு மாதத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) மாத்திரம் நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கும், பல்பொருள் அங்காடிகளில் இடம்பெறும் மது விற்பனைகளைத் தடுப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.