(சிவம்)மட்டக்களப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபையின் 50 வருட சேவை நிறைவு பொன்விழா நிகழ்வில் நினைவு மலர் வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சபை மண்டபத்தில் நடைபெற்றது.
திருத்தொண்டா சபையின் தலைவர் இ. சண்முகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சபையின் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு நினைவுப் படிகத்தைத் திறந்து வைத்தார்.
யாழ் கலைவாணர் வில்லிசைக் குழுவினரின் ஆசையை வென்ற அடியவர் வில்லுப்பாட்டு மற்றும் மட்டக்களப்பு பரதகலா மாணவர்களின் நிருத்தியாட்சரம் நடனம் என்பன இடம்பெற்றன.
திருத் தொண்டர் சபையின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உட்பட 63 பெர் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.






















