மட்டக்களப்பில் நாடக அரங்கச் செயற்பாடுகளிலும் கூத்து மீளுருவாக்க செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்ற மூன்றாவது கண் நண்பர்கள் குழுவின் அரங்கச் செயற்பாடுகளில் தெருவெளி அரங்கச் செயற்பாடு முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. அந்தவகையில் 2015ம் ஆண்டு நுண்கடன் பற்றிய தெருவெளி அரங்கச் செயற்பாட்டில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் சமூக செயற்பாட்டு நிறுவனமாக விளங்குகின்ற EHD அனுசரணையுடன் மூன்றாவது கண் நண்பர்கள் குழுவினரால் தெருவெளி அரங்க ஆற்றுகைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது..
இன்றைய உலகமயமாக்கல் சூழலின் மூலமாக உலகிலே நுகர்வுப் பண்பாடு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இச்செயற்பாடானது பல்தேசிய கம்பெனிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையானது மனிதர்களை மேலும் மேலும் நுகர்வுப்பண்டங்களாகவே வடிவமைத்து வருகின்றது..
இந்நிலையானது மனிதர்களை தங்கி வாழ்வோராக மாற்றியமைக்கப்பட்டிருப்பதனையும் கண்டுகொள்ள முடிகிறது. திட்டமிட்ட வகையில் பல்தேசிய கம்பெனிகளின் மூலமாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் வறுமை ஒழிப்பு என்கின்ற திட்டத்தின் கீழ் நுண்கடன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு கிராமங்கள் தோறும் பல்தேசிய கம்பெனி முகவர்களால் பரவலாக்கம் அடைந்திருக்கின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயசார் உற்பத்தியாளர்களாக இருந்த இடங்களை அடையாளம் கண்டு அத்தகைய இடங்களில் நுண்கடன் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தன்மையானது ஆபத்தான சூழலை தோற்றுவிக்கின்றது. சுயசார் உற்பத்தியாளர்களாக இருந்த மக்களை தங்கி வாழ்வோராகவும் மேலும் மேலும் வறுமைக் கோட்டிற்கு இட்டுச் செல்வதாகவுமே நுண்கடன் திட்டங்கள் நடைமுறையில் காணப்படுகின்றது.
மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதான திட்டமாக இருந்தால் மக்கள் நலன் சார்ந்ததாக அமைந்து காணப்பட வேண்டும். ஆனால் நுண்கடன் திட்டமானது அவ்வாறு அமையாமல் சுரண்டி இலாபம் அடைகின்ற பெரு வணிக நோக்கு கொண்;டதாக மாற்றமடைந்து இருக்கின்றது. நுண்கடன் திட்டமானது மனிதர் ஏறி வருகின்ற வளர்ச்சிப்படியான கயிறாக இருப்பதனை விடுத்து இன்று தூக்கு கயிராக மாறியிருப்பதன் அபத்தம் தான் என்ன?
எனவே இவற்றிலிருந்து விடுபட்டு சுயசார்புள்ள மனிதர்களாக வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் நுண்கடன் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்ட இத்தெருவெளி அரங்கச் செயற்பாடானது சமூகத்தின் மத்தியில் நுண்கடன் திட்டமானது எவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது? அது தொடர்பான கேள்விகனை எவ்வாறு முன்வைக்கலாம்? போன்ற விடயங்களை எடுத்துக் கூறி மக்கள் இதுபற்றிய உரையாடல்களை மேற்கொள்வதற்கான களமாகவும் சிந்திக்கத் தூண்டும் செயற்பாடாகவும் அமைகின்றது.
இத்தெருவெளி நாடக உருவாக்கமானது களப்பயிற்சி அரங்க முறை மூலமாகவே உருவாக்கப்பட்டது. இந்நாடகத்தில் நடிக்கின்ற நடிகர்கள் ஒவ்வொருவரும் மட்டக்களப்பிலுள்ள வௌ;வேறு கிராமங்களைச் சேரந்தவர்கள். இவர்கள் தங்கள் கிராமங்களில் மக்கள் நுண்கடனினால் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள,; கிராமங்களில் நடைபெற்ற சம்பவங்கள் போன்றவற்றை ஒவ்வொருவரும் கதைகளாக கூறினார்கள். பின்னர் இக்கதைகளை வைத்துக் கொண்டு கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் வழிப்படுத்தலின் அடிப்படையில் காத்திரமான கலந்துரையாடல்கள் மூலமாக நாடகத்திற்கான கதையும் நாடக வடிவமைப்பும் உருவாக்கப்பட்டது.
பின்னர் நுண்கடன் பற்றிய ஆபத்துக்கள், அதிலிருந்து மக்களை எவ்வாறு விழிப்படைய வைக்க வேண்டும் என்பது பற்றிய கருத்து நிலையினை பெண்நிலைவாத செயற்பாட்டாளரான வாசுகி ஜெயசங்கருடன் சந்தித்து கலந்துரையாடி பல ஆக்கப் பூர்வமான விடயங்களை கற்றுக் கொண்டோம். இவர் நுண்கடன் பற்றியும் அதனால் மக்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றியும் விரிவான, காத்திரமான ஆய்வை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 2014ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பிலுள்ள பல கிராமங்களில் பெண்கள் பலர் தற்கொலை செய்தமையானது பத்திரிகைகள் மூலமாக செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன. இச்செய்திகளை வைத்துக் கொண்டு தனது ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வின் இறுதியில் நுண்கடனின் மூலமாகத் தான் பெரும்பாலான பெண்கள் தற்கொலை செய்கின்றனர் என்பதை நிரூபித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக அனைத்து நடிகர்களும் நுண்கடன் சார்ந்த தகவல்களையும் அதனால் சமூகம் எதிர் கொள்கின்ற சவால்கள் என்பவற்றைத் தெளிவாக அறிந்து விளங்கிக் கொண்டதன் பிற்பாடு நாடகத்தை வடிவமைக்க ஆரம்பித்தோம்.
நடிகர்கள் அனைவரும் இணைந்து நுண்கடனினால் சமூகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சம்பவங்களை எடுத்து அதனைப் புதிதளித்தல் செய்து செய்து பின்னர் கலந்துரையாடி நாடகத்தை வடிவமைத்தோம் என்பது குறிப்படத்தக்கது. இவ்வாறு உருவாக்கப்பட்ட நாடகத்தின் கதைச் சுருக்கமானது பின்வருமாறு அமையும்.
பார்வையாளர்களுக்குள் இருந்து இருவர் கைகளை கோர்த்துப் பிடித்துப்படி பாடல் ஒன்றை பாடியவாறு மையப்பகுதிக்கு வந்து விளையாடுவதற்கு தயாராகி மற்றவர்களையும் அழைத்து விளையாடுவர். இவ்விளையாட்டானது “கொத்துருக்கு கொத்து” என்ற விளையாட்டாக அமையும். பின்னர் இவ்விளையாட்டானது கதைக் கருவை நோக்கி நகர்த்தப்பட அனைவரும் உறைநிலையில் நிற்க கடன் கொடுப்பவர் தோளில் பறையை சுமந்தவாறு பார்வையாளர்களுக்குள் இருந்தவாறு கடன் பற்றிய நன்மைகளைக் கூறிக்கொண்டு மையப்பகுதிக்கு வந்து உறைநிலையில் நின்ற அனைவரையும் தன் பக்கம் இழுப்பார். அப்பொழுது அனைவரும் கடன் கொடுப்பவரிடமிருந்து பணத்தை கடனாக பிய்த்து எடுத்துக் கொண்டு ஓடுவது போன்று உறைநிலையாவர். கடன் கொடுப்பவர் அனைவருக்கும் விண்ணப்பப்படிவத்தை கொடுப்பதும் அதில் போதிய விளக்கங்கள், நிபந்தனைகள், வட்டி வீதம், எந்த நிறுவனம்?, எங்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது? போன்ற தெளிவின்மையும் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட மற்றவர்கள் அவரை விடுத்து கடன் வாங்குவதிலுயே முழு ஆர்வத்தையும் காட்டுவதும் சொல்லப்படுகின்றது. பின்னர் கடன் கொடுப்பவர் விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் கொண்டு இரண்டு பகுதிகளாக பிரிந்து நிற்க சொல்லி கடன் தொகையையும் வட்டி வீதத்தையும் சொல்லிக் கூப்பிடுவார். இருபக்கமுமிருந்து மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓட இறுதியில் ஒருவர் எடுத்து கொண்டு ஓடுவார். பின்னர் மீண்டும் அனைவரும் உரைநிலையில் நிற்பர்.
கடனை அறவிட கடன் கொடுத்தவன் ஊருக்குள் வர மக்கள் அவனைக் கண்டு ஒளிந்து கொள்வதும் மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முனைவதும் கடன் கொடுக்க முடியாது அவதிப்படுவதும் அடுத்த கடனை எடுக்க முடியாதோ! என்ற நிலைப்பாட்டில் கடனை கட்டியவர்கள் கடன் கட்ட இயலாதவர்களிடம் சண்டைப் பிடிப்பதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் யதார்த்தமாக காட்டப்படுகின்றது.
பின்னர் வீட்டினை குறியீட்டாக கொண்டு வந்து அவ்வீட்டிற்குள் இந்த கடனால் கணவன் மனைவிக்குள் இடையில் ஏற்படுகின்ற வன்முறையும் அதனால் ஒரு குடும்பம் சிதைவுப்படுதலையும் காட்சிகளுக்கூடாகவும் பாடலுக்கூடாகவும் கொண்டு வரப்படுகின்றது. இப்பாடல் பின்வருமாறு…
கடனால் இங்கு கணவனும் அடிக்க
குடும்பமும் சிதைகிறதே!
குடும்பமும் சிதைகிறதே!
சந்தேகம் என்னும் சாத்தானும் வந்து
பெண்களை வதைக்கிறதே!
இப்பாடல் முடிந்ததும் குறித்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பிழையான பார்வையால் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்து பின்னர் அப்படியே உறைநிலையாகி விட கடனால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளை பின்வரும் பாடல் மூலமாக உருக்கமாகச் சொல்லப்படுகின்றது.
புத்தி இருந்தும்
சக்தி இருந்தும்
பிழைக்க தெரியல – எங்களால்
பிழைக்க தெரியல
அறிவிருந்தும் ஆற்றலிருந்தும்
உயர முடியல – எங்களால்
உயர முடியல
கரமாய் வந்த கடனும் இப்போ
கழுத்தை நெறிக்குதே – ஐயோ
கழுத்தை நெறிக்குதே
வாங்கிய பணத்துக்கு வட்டியும் கட்டி
ஆயுளும் முடியுதே
வாழ்வு நோயிலும் அழியுதே
மன நோயிலும் மடியுதே…!
என்ற முடிய எல்லோரும் காட்சிப் படிமங்களாக மாறுகின்றனர்.
பின்னர் மீண்டும் கடன் கொடுப்பவரின் சத்தம் கேட்டு மக்கள் பயந்து ஓட கடன் கொடுப்பவர் அவர்களை விடாமல் பிடித்து இழுத்து கொள்கிறார். அப்போது பார்வையாளர்களுக்குள் இருந்தவாறு ஒருவர் சத்தத்தோடு ஓடிவந்து “என்ன ஓடி ஓடி எடுத்தியள். இப்போ ஓடி ஓடி ஒளியிறியள்” என்று அவர்களைப் பார்த்துக் கேட்க ஒவ்வொருவரும் தாங்கள் விட்ட பிழைகளை சொல்லுவார்கள்.
நபர் 1 : நாங்க லோன் எடுக்க முதல் வட்டிய பத்தி நினைச்சிருந்தா எங்களுக்கு இந்த நிலை வந்துருக்குமா?
கடன் கொடுப்பவர் : கடன் தாறது உங்கட வாழ்வாதாரத்த மேம்படுத்ததான்
நபர் 4 : அப்ப ஏன் அது கொலைக் கயிறா மாறினது?
நபர் 5 : அப்போ எங்களுக்கு காசி தான் முக்கியமாக இருந்தது. சைன் மட்டும் தான் வைச்சம். வேறொன்னும் விளங்கல
கடன் கொடுப்பவர் : ஏன் அண்ணன் தமிழ்ர தானே இருந்தது?
நபர் 6 : பெயரும் ஊரும் தான் தமிழ்ர இருந்துது
நபர் 7 : நான் வச்ச கையெழுத்து என்ட தலையெழுத்தையே மாத்திப் போட்டுது.
இவ்வாறான உரையாடலுக்கூடாக பார்வையாளர்களை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைக்க அது உரையாடலுக்கு இட்டு செல்கிறது.
இவ்வாறாக இந்நாடகத்தின் கதை அமைப்பானது பல காட்சிகளுக்கூடாகவும் குறியீட்டுத் தன்மையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாடக உருவாக்கத்திற்கு அதில் வருகின்ற உரையாடல்கள், காட்சியமைப்புகள், பாடல்கள் போன்ற அனைத்து விடயங்களும் அனைவரும் இணைந்து கூட்டுச் செயற்பாடு மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
நுண்கடன் பற்றிய இத்தெருவெளி அரங்க உருவாக்கமானது ஏனைய தெருவெளி அரங்க முறைகளிலிருந்து வேறுபட்டதாகும். அதாவது பாரம்பரிய விளையாட்டுக்களை வைத்துக் கொண்டு நாடகமாக வடிவமைத்தமை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆரம்பத்தில் நாடகம் கொத்திருக்கு கொத்து எனும் விளையாட்டில் தொடங்கப்பட்டு பின்னர் அவ்விளையாட்டு மாறி “கடன் இருக்கு கடன்” என்ற மையக் கருவை நோக்கி நகர்த்தப்படுகின்றது. இவ்வுத்தி முறையானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இலகுவாக நாடகத்தின்பால் இழுப்பதற்கு பலமாக அமைகின்றது. பின்னர் கரடி ஊருக்குள் வருதல் விளையாட்டானது எவ்வாறு கடன் கொடுப்பவர் மக்களை தன் பக்கம் இழுக்கின்றார் என்பதனை காட்டுவதற்காக இவ்விளையாட்டுக்கூடாக கடன் கொடுப்பவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
கடன் கொடுக்கும் போது வட்டி வீதம், நிபந்தனைகள் போன்றவற்றை கேட்காமல் பணத்தை அடிபிடிபட்டு எடுக்கின்ற நிலையில் தான் இன்று மக்கள் இருக்கின்றனர் என்பதனை சித்திரிப்பதற்கு நாயும் இறைச்சித் துண்டும் எனும் விளையாட்டுக்கூடாக உருவாக்கியிருக்கின்றமை நாடகத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றது. மேலும் கடனை எடுத்து விட்டு கடனை அறவிட வரும் போது கட்ட முடியாத நிலையில் சிலர் ஒளிந்து கொள்ளும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது. அதனை ஏனையவர்களும் பொய் சொல்லி மறைக்கின்ற நிலைதான் இன்றைய சமூகத்தில் பரவலாக நிலவுகின்றது. இந்நிகழ்வை நாடகத்தில் வெளிப்படுத்திக் காட்டுவதற்காக சங்கிலி புங்கிலி விளையாட்டு குறியீடாக பயன்படுத்தப்படுகிறது.
பார்க்கின்றவர்களுக்கு நாடகம் விளையாட்டாக அமைந்தாலும் அவர்களின் மனங்களில் நாடகத்தின் மூலமாக சொல்லப்படுகின்ற கருத்துக்கள் ஆழமாகப் பதிகின்றன. நாடகம் முடிவடைந்ததும் பார்வையாளர்கள் பல கருத்துக்களை முன்வைத்து நடிகர்களுடன் நுண்கடன் பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் அதனால் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றியும் தெளிவாக உரையாடுகின்றனர். இவ்வாறான உரையாடல்கள் மூலமாக நடிகர்கள் மக்களுக்கு தெளிவை ஊட்டுபவர்களாக இருக்க வேண்டும்.
இத்தெருவெளி நாடகத்திற்கு இசை வாத்தியமாக பறை பயன்படுத்தப்பட்டமை என்பது சிறப்பானதாக அமைகின்றது. பறையை நாடக ஆற்றுகைக்கு வெளியே வைத்து பயன்படுத்தாமல் நாடக ஆற்றுகையின் தொடர்புடைய விதமாக கடன் கொடுப்பவர் பறையை தோளில் போட்டு அடித்துக் கொண்டு வருவதும் நடிப்பதும் அவரின் பாத்திரவாக்கத்திற்கு வலுசேர்ப்பதாக பறை அமைந்திருந்தமை முக்கிய விடயமாக அமைகின்றது.
மேற்குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது தெருவெளி அரங்கச் செயற்பாடுகளானது இன்றைய சமூகத்தில் பரவலாக காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அலசி ஆராய்ந்து வருகின்றது.
அதிலும் இன்றைய சமகாலத்தில் காணப்படுகின்ற கடன் தொடர்பான பிரச்சினைகளும் அதன் வெளிவரும் விளைவுகளும் அவ்விளைவுகளிலிருந்து தம்மை எவ்வாறு விடுவித்து கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வையும் சுயசார்புள்ள மனிதர்களாக வாழ்வதன் அவசியத்தை வழியுறுத்தியும் இந்நாடகம் ஆக்கப+ர்வமாக அமைந்ததோடு சமூக முன்னெடுப்புக்கான காத்திரமான உரையாடலை மேற்கொள்கின்ற களமாகவும் அமைந்தது என்பது திண்ணம்.
ஆக்கம்
ப.ராஜதிலகன்