யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட தொழில் நிபுணர்களை உருவாக்கும் வெற்றியின் மாதம் நிகழ்வு

(எஸ்.சதீஸ்)
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினால் வெற்றியின் மாதம் நிகழ்வு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டுவருகின்றது. இந் நிகழ்வு மட்டக்களப்பிலும் இன்று சனிக்கிழமை 25ம் திகதி இடம்பெற்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் பிரதீப் வசந் தலைமையில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது.

இதில் தொழிலை வருமானம் ஈட்டக்கூடிய எதிர்பார்த்திருப்போருக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி நிறுவனத்தினூடாக தொழிலை எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் அதன்மூலம் கிடைக்கும் வருமானம்,நன்மைகள் பற்றியும் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கையின் மிகப் பெரிய நிறுவனமான ஜோக் கீல்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகக் கொண்ட யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், ஒருவர் இத் தொழில் ஒன்றினை பெற்றுக்கொள்வதன் மூலம்  ஒருவரின் தொழில்தரம் மற்றும் திறமை செயல்திறனுக்கு ஏற்ப மூன்று இலட்சத்துக்கு மேலும் மாதாந்த வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம் என உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய இந் நிகழ்வின்போது பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு இங்கு வைக்கப்பட்டிருந்த தொழில் முன்னேற்றம் பற்றிய கண்காட்சியினையும் கண்டு தொழில் நிபுணத்துவம் பற்றிய ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது அண்மையில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட  ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி, அழகியற்கலை பயிற்சி நெறி போன்றவற்றில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் கிழக்கு வலய முகாமையாளர் எம்.ஜெகவண்ணன், தலைமை அலுவலக சந்தைப்படுத்தல் முகாமையாளர் கீர்த்தி முனசிங்க உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.