(சதீஸ்)
கடந்தகால ஆட்சியாளர்கள் எமது சிறுபான்மையினருக்கு குறிப்பாக தமிழினத்திற்கு செய்த அடக்குமுறைகளை துணிந்துநின்று தட்டிக்கேட்ட கட்சி எமது தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். எமது உரிமைகள் பறிக்கப்படும்போது ஓங்கிய குரலாக ஒலித்து தமிழருக்காக குரல் கொடுத்தது எமது தமிழ் தேசிய கூட்டமைப்பாகும் எமது இக் கூட்டமைப்பை உடைப்பதற்கு தேசிய ரீதியில் பல சக்திகள் உருவாக்கப்பட்டுள்ளது, அதையும் தாண்டி தொடர்ச்சியாக தேசிய ரீதியில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் தமிழருக்காக குரல் கொடுத்து வருகின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

நேற்று 20ம் திகதி வவுணதீவு பிரதேசத்தின் நாவற்காட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்து பேசுகையில்,
எமது தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பை பலவினப்படுத்துவதற்கும் வெத்திலைக் காரரும் யானைக் காரரும் அவர்களால் ஏவப்பட்ட சுயேட்சை குழுக்கழும் பரிசுப் பொருட்களுடனும் வெகுமதிகளுடனும் வாக்குக் கேட்டு வருவார்கள் அதற்கு தமிழ் மக்கள் சோரம் போபவர்களாக இருக்கக்கூடாது.
இந்தப் பாராளுமன்றத் தேர்தலானது கூட்மைப்பைப் பொறுத்த வரையில் முக்கியமானதாக அமையவுள்ளது.நிச்சயமாக எந்தப் பேரினவாதக் கட்சியினாலும் அறுதிப் பெரும்பாண்மை ஆசணங்களைப் பெற்று ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் அப்போது த.தே.கூட்டமைப்பு அக் கட்சிகளுடன் பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டுமாக இருந்தால் வடகிழக்கில் கூடுதலான ஆசணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்காக தமிழ் மக்களின் வாக்கழிப்பு அதிகரிக்கப்படுவதுடன் மாற்றுக் கட்சிகளுக்கோ சொந்த பந்தங்களை கருத்தில் கொண்டோ சுயேட்சைக் குழுக்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிப்பதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சொற்ப சலுகைகளுக்கோ வெகுமதிகளுக்கோ ஏமாந்து தங்களது பெறுமதிமிக்க வாக்குகளை வீணாக்காமல், நாம் அனைவரும் கொள்கைக்காக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிப்பதனாலேயே மீண்டும் எமது பலத்தை உள்நாட்டிலும் சர்வதேசத்துக்கும் காண்பித்து நாம் உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக தலை நிமிர்ந்து வாழ வேன்டும்.
என தெரிவித்தார்.