மட்டக்களப்பு றோட்டறிக் கழகம் நடாத்தும் வேடிக்கை விநோத காணிவேல்

மட்டக்களப்பு றோட்டறிக் கழகம் 'வேடிக்கை விநோத காணிவேல்' ஒன்றினை எதிர்வரும் 16.07.2015 தொடக்கம் 20.07.2015 வரை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மைதானத்தில் தினமும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை நடாத்தவுள்ளது.


இதில் உலகப் புகழ்பெற்ற மிஸ்டர் மெஜிக்கின் வியக்கவைக்கும் மாயாஜால வித்தைகள் மற்றும் வாகன சாகசங்கள், சிறுவர்களைக் கவரும் விளையாட்டுக்கள், இசை நிகழ்ச்சிகள் என பல வேடிக்கை விநோதங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.