மைதிரிபால சிறிசேனாவுடன் உறுதியான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இத் தேர்தலில் இறங்கியுள்ளேன் ; சி.சந்திரகாந்தன்

( SATHEESH )
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய வகையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனாவுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இத் தேர்தலில் மைதிரிபால சிறிசேனாவுடன் இணைந்து தேர்தலில் களமிறங்கியுள்ளது.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை13ம் திகதி மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், நாங்கள் இத் தேர்தலில் வெற்றிபெறுவோம் வெற்றி பெறும்போது அமைச்சரவையிலே சரியான ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படவேன்டும் என்பது போன்ற பல நன்மையான விடயங்கன் வழங்கப்படவேன்டும் என ஒப்பந்தமிட்டுள்ளோம்.

இந்த தேர்தல் தெரிவில் நாம் தெரிவுசெய்யப்படாத பட்சத்தில் தேசிய பட்டியலில் எமக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படும் என்பதனையும் உறுதிசெய்துள்ளோம்.

இத் தேர்தலில் நாம் இந் நாட்டின் ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம். இதனால் தமிழ் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். மக்களுக்கு தேவையானவற்றை கேட்டு பெற்றுக்கொடுக்கலாம் இதைத்தான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.