இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம்




 (சிம்)


இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப்  பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

1983 ஆம் ஆண்டு யூலைக் கலவரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை மற்றும் தளபதி குட்டிமணி ஆகியோரின் 32 அவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.) மாலை நடைபெற்றது.

இதல் கலந்து கொண்டு கோவிந்தன் கருணாகரம் மேலும் கூறுகையில்

எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதனால் அவற்றைப்பெறும் நோக்கோடு அகிம்சைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது வெற்றியளிக்காத நிலையில் பின்பு ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் உட்பட 53 கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். தலைவர் தங்கத்துரை அவர்களை  நீதிமன்றில் ஆஜர் செய்த போது நாங்கள் வன்முறைமீது காதல் கொண்ட மன நோயாளிகளோ அல்லது அதன்மீது வெறிகொணடவர்களோ அல்ல மாறாக ஆசிய தேசமென்றாலும், ஆபிரிக்க தேசமென்றாலும்  மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது  அவர்களுக்காக குரல் கொடுப்போம் எனவும்

தளபதி குட்டிமணி தனது கண்களை பார்வையற்ற ஒரு தமிழருக்கு கொடுத்து அதன் மூலம் மலரும் தமிழ் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும், தனது உடலை யாழ்ப்பாண வைத்த்pய பீடத்திறகு ;கொடுத்து வைத்தியத் துறைசார் மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும.; என தெரிவித்தபோது அதனடிப்படையில் நாங்கள் உள்வாங்கப்பட்டோம். அவர்களது கனவு நிiவேறாவிட்டாலும் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் பெறப்படும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரக்குமார் பிரசன்னா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றினர்.






.