புளியந்தீவு ஆணைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தினால் புத்தகபைகள் அன்பளிப்பு

   ரவிப்ரியா
  சமய சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டுள்ள மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தியான் நற்பணி மன்றம் படுவான்கரை பிரதேச ஆரம்ப பிரிவ மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்குடன் அங்குள்ள ஆலயங்களோடு இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
படுவான்கரை பிரதேசத்திலுள்ள இலுப்படிச்சேனை காளிகோயிலை அண்டிய கொத்தியாவலை கலைமகள் வித்தியாலயம் இ குறிஞ்சாமுனை காளிகோயிலை அண்டிய அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பனையறுப்பான் பத்திரகாளியம்மன் கோயிலை அண்டிய பனையறுப்பான் மகா வித்தியாலயம். போன்ற மூன்று பாடசாலைகளுக்கு ஆண்டு 1 தொடக்கம் 3 வரை கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆணைப்பந்தியான் சமூக நற்பணி மன்ற இலச்சினை பொறிக்கப்பட்ட புத்தகப் பைகளை வழங்கி; வைத்தது..



இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்களும் கோயில் நிர்வாகமும் கிராம சேகவர்களும் ஊர்முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மன்றத்தலைவர் மு.துதீஸ்வரன் உரையாற்றுகையில் மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் கல்வி பயிலும் மானவமாணவிகள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் தங்களது கல்வி நடவடிக்கைகளை தொடருவதை அவதானிக்க கூடியதாகவிருந்தது.எனவே மன்றத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு சிறு உதவியை செய்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும் இறை பக்தியும் நல்லொழுக்கமும் கல்வியறிவு என்பவற்றினாலே எமது சமூகம் முன்னிலையை அடையமுடியும் இது போல ஏனையவர்களும் எமது மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்