ஆலையடிவேம்பில் வீதிகளுக்குக் கொங்கிறீட் இடும் வேலைகளைப் பிரதேச செயலாளர் பார்வையிட்டார்

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செப்பனிடப்பட்டு கொங்கிறீட் இடப்படும் வீதிகளின் புனருத்தான வேலைகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் இன்று (29) காலை பார்வையிட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.ஏ.அஜீர், கணக்காளர் கே.கேசகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ரஞ்சன் ஆகியோருடன் சென்ற அவர், அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமமட்ட அபிவிருத்திகளுக்குப் பொறுப்பானவர்களுடன் இணைந்து குறித்த வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டார்.

இதன்போது அக்கரைப்பற்று - 7/4, பழனிக் குருக்கள் வீதி, அக்கரைப்பற்று - 7/1, சிதம்பரப்பிள்ளை வீதி, கோளாவில் - 3, கேணி வீதி மற்றும் காளிக்குட்டி பூசகர் வீதி, கோளாவில் - 2, தியாகப்பர் வீதி, அக்கரைப்பற்று - 8, விபுலானந்தா வீதி ஆகியவற்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் செப்பனிடும் வேலைகள், கொங்கிறீட் இடும் வேலைகள், வடிகானமைப்புக்கள் என்பவற்றைப் பார்வையிட்டதுடன் அவை தொடர்பாக பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.