மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் தாபகர் திரு.வி. நல்லையாமாஸ்டர் அவர்களது முயற்சியால் 01-07-1946 அன்று தொடங்கி வைக்கப்பட்டதினம் தாபகர் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம் இவ்வடிப்படயில் 01-07-2015 அன்று நல்லையாமாஸ்டர் அவர்களது உருவச்சிலைக்கு கலாசா முதல்வர் ஏ.எஸ்.யோகராஜா உள்ளிட்ட விரிவுரையாளர்களினால் மலர் மாலையணிவித்தலுடன் நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மறுநாள் 02-07-2015 காலை கலாசாலை முதல்வர் ஏ.எஸ்.யோகராஜா அவர்களது தலைமையில் கலாசாலையின் எல்லா உறுப்பினர்களையும் உள்ளடக்கிய தாபகர் நல்லையா மாஸ்டர் அவர்களை நினைவுகூரும் ஒன்றுகூடல் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
முதல்வரால் தாபகரதுபணிகள் அவரது வரலாறு அவரையொட்டடிய முக்கியமான சம்பவங்கள் போன்றன நினைவுகூரப்பட்டது.தொடர்ந்து விரிவுரையாளர் என்.லோகேந்திரன் நூலகர் சுந்தரமூர்த்தி அவர்களது உரைகளுடன் ஆசிரியமாணவன் அஸ்மி அவர்களது கவிதைபோன்றனவும் இடம்பெற்றது.























