(குளத்தூர் ரவி, எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலய பாடசாலையான கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி,விரிவுரையாள், மாணவர்கள், அனைவரும் இனைந்த "பாடசாலையும் சமூகமும்" எனும் இரண்டு நாட்களை கொண்ட நிகழ்ச்சி திட்டம் கடந்த 29ம் திகதி கன்னன்குடா மகா வித்தியாலய அதிபர் தலைமையில் வித்தியாலய மண்டபக்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், மட்டக்களப்புக் கல்வியில் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.இராஜேந்திரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞ.சிறிநேசன், கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி அன்ரன் புஸ்பலதா, கல்லூரியின் பொறுப்பு விரிவுரையாளர்கள், பயிலுனர் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் (திங்கள் இரவு) பொறுப்பு விரிவுரையாளராக வருகைதந்து சமூக செயற்றிட்டத்தில் கலந்துகொண்டு பணியாற்றிய திருமதி அன்ரன் புஸ்பலதா அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலியினால் சுகயீனமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.
விரிவுரையாளர் திருமதி அன்ரன் புஸ்பலதாவுக்கு அன்று இடம்பெற்ற சமூக செயற்றிட்டம் இறுதி பணியாக அமைந்துவிட்டது.
திருமதி அன்ரன் புஸ்பலதா எமது Battinews.com (வற்றிநியூஸ்.கொம்) இணையத்தளத்தின் வளர்ச்சி பற்றியும் , மற்றும் சில ஆலோசனைகளும் வழங்கி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . இவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.














