கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் அரச முன்னிலை கள உத்தியோகத்தர்களுக்கான சமூக அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய பயிற்சிநெறியினை நிறைவுசெய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 17.07.2015 அன்று சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
ஜைகா (JICA) திட்ட உதவியுடன் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் செயற்படுத்தப்பட்ட முன்னிலை கள உத்தியோகத்தர்களுக்கான ( Forwaed Project ) 10 நாட்கள் கொண்ட பயிற்சிநெறியினை முழுமையாக நிறைவுசெய்த 60 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் திருமதி.கவிதா உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்,கிழக்கு மாகாண பிரதம பிரதிச் செயலாளர் கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் மற்றும் ஜைகா (JICA) திட்ட பிரதிநிதிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
வௌிக்களத்தில் சேவையாற்றும் முன்னிலை உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளையும் சேவைகளையும் இலகுவில் வினைத்திறனுடன் மக்களுக்கு வழங்கும்பொருட்டும், மக்களை பொருளாதார ரீதியில் அவர்கள் வாழ்கைத்தரத்தை கட்டியெழுப்பும் முகமாகவும் ஜப்பான் நாட்டு ஜைகா (JICA) திட்ட பிரிவினால் இப் பயிற்சிநெறி தயாரிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது.















