கொம்மாதுறை பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனி

 (s. டினேஸ்)
கொம்மாதுறை ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனி நிகழ்வானது இன்று 30ம் திகதி வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.
இவ் பாற்குட பவனியானது கொம்மாதுறை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்டு பிரதான வீதி வழியாக பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்ததினையடுத்து ஆலயத்தில் அபிஷேகம்  இடம் பெற்றது.

பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனியில் கலந்துகொண்ட பக்தர்கள் மிகவும் பக்தியுடன், இந்து சமய கலாச்சாரத்தில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் கலந்துகொண்டதை படங்களில் காணமுடிகின்றது.