துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுதலை

கொக்­கொட்­டிச்­சோலை– முனைக்­காடு என்னும் இடத்­தைச்­சேர்ந்த சிவ­ஞானம் குண­சீலன் என்­ப­வ­ருக்கு எதி­ராக சுடு­படைக் கலங்கள் மற்றும் வெளிப்­ப­தார்த்­தங்கள் சட்­டத்தின் கீழ் தொட­ரப்­பட்ட வழக்கில் அவர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 21ஆம் திகதி ரி 56–2 ரக தன்­னி­யக்க துப்­பாக்கி ஒன்­றையும் 30 வெடிக்­காத ரவை­க­ளையும் உடை­மையில் வைத்­தி­ருந்­த­தாக குற்றம் சுமத்தி அவ­ருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. இந்த வழக்கு மட்­டக்­க­ளப்பு மேல்­நீதி மன்­றத்தில் தொட­ரப்­பட்டு மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி விசு­வ­லிங்கம் சந்­தி­ர­மணி முன்­னி­லையில் விசா­ரிக்­கப்­பட்டு வந்­தது.


இவ்­வ­ழக்கில் குற்­றத்தை நிரூ­பிப்­ப­தற்­காக அரச தரப்பில் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­ரத்­தின, சார்ஜன்ட் மொஹமட், சார்ஜன்ட் ஜய­ரத்­தின, பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளான விம­ல­ரத்­தின, சுசிதா, கொக்­கொட்­டிச்­சோலை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி கரு­ண­திஸ்ஸ, சிரேஷ்ட உதவி அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் பி.ஜி. மத­வல ஆகியோர் சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

எதி­ரா­ளி­யான சி.குண­சீலன் குற்­றத்தில் தனக்கு சம்­பந்தம் இல்லை என்று சாட்­சி­ய­ம­ளித்தார். இவரின் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பேரின்பம் பிறேம்­நாத்தும் அரச தரப்பில் சட்­டத்­த­ரணி லாபீரும் ஆஜ­ரா­கினர். '

வழக்கு விசா­ரணை முடிவில் அரச தரப்பில் அழைக்­கப்­பட்­டி­ருந்த சாட்­சி­க­ளான உப­பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­ரத்­தின, சார்ஜன்ட் ஜய­ரத்­தின,பொலிஸ் கான்ஸ்­டபிள் விம­ல­ரத்­தின ஆகி­யோரின் சாட்­சி­யங்­க­ளுக்­கி­டையில் பாரிய முரண்­பாடு காணப்­ப­டு­வ­தா­கவும் மேலும் சான்­றுக்­கட்­டளைச் சட்­டத்தின் பிரிவு 27 (1)இன் கீழ் எதி­ரி­யினால் பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­ரத்­தின என்­ப­வ­ருக்கு வழங்­கப்­பட்ட வாக்கு மூலத்தின் அடிப்­ப­டையில் குறித்­த­சான்றுப் பொருட்­க­ளான தன்­னி­யக்க சூழல் துப்­பாக்­கி­யி­னையும் வெடிக்­காத ரவை­க­ளையும் கண்­டு­பி­டித்­தி­ருந்­த­தாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்த போதிலும் எதி­ரி­யினால் அவ்­வா­றான வாக்­கு­மூலம் வழங்­கப்­பட்­டி­ருந்­ததா என்­பதில் முழு சாட்­சி­யத்­தையும் எடுத்­துப்­பார்க்கும் போது சந்தேகம் எழுவதாகவும்

இதனால் அரச தரப்பானது நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிய காரணத்தினால் எதிரியை விடுதலை செய்வதாக மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.